மின்சாரம் பாய்ந்து நில புரோக்கர் பலி: அழுகிய நிலையில் உடல் மீட்பு

சென்னை: துணிக்கு இஸ்திரி போடும்போது மின்சாரம் பாய்ந்து நிலம் விற்பனை செய்யும் புரோக்கர் உயிரிழந்தார். மதுரை மாவட்டம் சின்ன அனுப்பானடி கிராமம் தாழம்பு தெருவை சேர்ந்தவர் ராமு(50). இவர் சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெசப்பாக்கம் பிள்ளையர் கோயில் தெருவில் தங்கி கடந்த 4 ஆண்டுகளாக நிலம் விற்பனை செய்யும் புரோக்கராக வேலை செய்து வந்தார். திருமணம் ஆகாததால் அவர் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அவர் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் வசிப்போர் எம்.ஜி.ஆர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, துணி அயர்ன் செய்து கொண்டிருந்த நிலையில் அழுசிய நிலையில் இறந்துகிடந்தார். உடனே போலீசார் ராமு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மின்சாரம் பாய்ந்த இறந்தது தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை