மாற்று இடம் வேண்டி போராட்டம்

 

சாத்தூர், மே 9:சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ரூ.50 கோடி மதிப்பில் புதிதாக 350 கடைகள் கட்டுவது, அர்ச்சுனா ஆறு மீது மேம்பாலம் அமைப்பது போன்ற பணிகள் செய்வதற்கு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதனால் புதிய கடைகள் கட்டுமான பணியை மேற்கொள்ள கோவில் நிர்வாகம் பழுதடைந்தபழைய கடைகளில் இருந்த வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கியுள்ளது.

ஆனால் வியாபாரிகள் மாற்று இடத்திற்கு செல்லாமல் நேற்று மாலை கோவில் நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, உதவி ஆணையாளர் கருணாகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை