மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி, கல்வி திட்டத்தின் கீழ் பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு நாளை மறுதினம் (10ம் தேதி) முதல் ஏப்ரல் மாதம் 9ம் தேதி வரை மருத்துவ மதிப்பீட்டு முகாம் 14 ஒன்றியங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. அதன் விவரம் வருமாறு: நாளை மறுதினம் (10ம் தேதி) திருவள்ளூர் ஒன்றியம் –  வேப்பம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 12ம் தேதி திருத்தணி ஒன்றியம் – திருத்தணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 15ம் தேதி மீஞ்சூர் ஒன்றியம் – பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 17ம் தேதி சோழவரம் ஒன்றியம் – சோழவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 19ம் தேதி ஆர்.கே.பேட்டை ஒன்றியம் – ஆர்.கே.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 22ம் தேதி புழல் ஒன்றியம் –  புழல் பொப்பிலி ராஜா அரசு மேல்நிலைப்பள்ளி, 24ம் தேதி பூண்டி ஒன்றியம் – பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, 26ம் தேதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் – கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 29ம் தேதி கடம்பத்தூர் ஒன்றியம் – கடம்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 31ம் தேதி வில்லிவாக்கம் ஒன்றியம் – அம்பத்தூர் பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஏப்ரல் மாதம் 2ம் தேதி எல்லாபுரம் ஒன்றியம் – பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 5ம் தேதி பள்ளிப்பட்டு ஒன்றியம் – பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம், 7ம் தேதி திருவாலங்காடு ஒன்றியம் – திருவலாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, 9ம் தேதி பூந்தமல்லி ஒன்றியம் – பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இம்மருத்துவ மதிப்பீட்டு முகாமில் தேசிய அடையாள அட்டை, அறுவை சிகிச்சை மற்றும் உதவி உபகரணம் தேவையுள்ள மாற்றுதிறன் கொண்ட குழந்தைகள் கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 4 புகைப்படம், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வரவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

Related posts

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி