மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோவில் கைது

 

உளுந்தூர்பேட்டை, மே 27: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாடு கிராமத்தில் வசித்து வரும் கோவிந்தன் மகன் தெய்வீகன் (21) என்ற வாலிபர் இதே ஊரில் வசித்து வரும் கண்பார்வை குறைபாடு உடைய 15 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை கரும்பு வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தெய்வீகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

துறையூர் மூங்கில் தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சி அண்ணா நகர் கிளையில் கூட்டுறவு துறை பணியாளர் நாள்

திருவெறும்பூர் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது