மாற்றுத்திறனாளிகளை கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம்

நாகர்கோவில், ஜூலை 17 : விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை உடனே வழங்க வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏஏஒய் ரேஷன் கார்டு வழங்க வேண்டும். 100 நாள் வேலை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் முகமது புறோஸ்கான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேசன், மாநிலக்குழு உறுப்பினர் லிட்டில் பிளவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் குமார், சார்லஸ், மனோகர ஜஸ்டஸ், அருள், சக்திவேல், ஜெயானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்