மாறுபட்ட காலநிலையால் ரோஜா மலர்கள் அழுகி உதிர்கின்றன

ஊட்டி: ஊட்டியில் கடந்த இரு மாதங்களாக  உறைபனி விழாத நிலையில், ரோஜா பூங்காவில் அனைத்து செடிகளிலும் மலர்கள் காணப்பட்டன. கொரோனா ஊரடங்கிற்கு பின், ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் மலர்களை கண்டு ரசித்து சென்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது சாரல் மழை, நீர் பனி என மாறுபட்ட காலநிலை நிலவிய நிலையில், தற்போது பூங்காவில் உள்ள பெரும்பாலான செடிகளில் உள்ள மலர்கள் அழுக துவங்கியுள்ளன.ஒரு சில செடிகளில் பனியில் கருகி மலர்கள் உதிர துவங்கியுள்ளது. இதேபோன்று மாறுபட்ட காலநிலை நிலவினால், ஓரிரு நாட்களில் அனைத்து செடிகளிலும் உள்ள மலர்கள் உதிர வாய்ப்புள்ளது. இதனால் ரோஜா பூங்காவிலும் மலர்கள் இல்லாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது….

Related posts

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி