மார்த்தாண்டத்தில் பழுதடைந்த சாலை இன்டர்லாக் கற்கள் பதித்து சீரமைப்பு

மார்த்தாண்டம் அக்.11: மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பழுதடைந்த சாலை பகுதி இன்டர்லாக் கற்கள் போட்டு சீரமைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் மார்த்தாண்டத்தில் சாலைகள் சேதமடைந்தன. இதில் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் காந்தி மைதானத்திற்கும் பழைய தியேட்டர் ஜங்ஷனுக்கும் இடைப்பட்ட பகுதியில் 4 இடங்களில் ரோடு பல்லாங்குழி போல் மாறியது. இதனால் இந்த ரோட்டில் செல்லும் வாகனங்கள் பழுதடைவதும், பைக்கில் வந்து செல்வோர் விழுந்து எழுந்து செல்வதும் வாடிக்கையாக தொடர்ந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த ரோடை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் ரோட்டில் ஏற்பட்ட குண்டு குழிகள் நிரப்பப்பட்டு இன்டர்லாக் கற்கள் போடப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி