மார்க்கெட் நுழைவுவாயிலில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு

ஊட்டி :  நகராட்சி மார்க்கெட் நுழைவு வாயில் பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சியின் மார்க்கெட் பகுதியில் 1500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவைகளுக்கு செல்ல பல இடங்களில் நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கருவாட்டு கடை கேட் பகுதியில் உள்ள நுழைவுவாயில் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபாதையில் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. அப்பகுதி சற்று மேடாக காட்சியளிக்கிறது. இதனால், மார்க்கெட்டில் தேங்கும் மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற முடியாத நிலையில், நுழைவு வாயில் பகுதியில் எந்நேரமும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நுழைவு வாயில் பகுதியிலேயே கோழிகள் மற்றும் மீன் போன்றவற்றை இறக்கும் லாரிகள் வந்துச் செல்லும் நிலையில், அவைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் இங்கு தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர். …

Related posts

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்