மார்க்கெட் கழிப்பிடத்தை சீரமைக்க கோரிக்கை

 

ஊட்டி, ஜூன் 14: ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பராமரிப்பின்றி உள்ள பொது கழிப்பிடங்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மளிகை, காய்கறி, இறைச்சி உட்பட அனைத்து வகையான கடைகளும் இங்கு உள்ளன. இதனால், உள்ளூர் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து நாள் தோறும் பல ஆயிரம் வாடிக்கையாளர்கள் மார்க்கெட்டிற்கு வந்து செல்கின்றனர். வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி மார்க்கெட்டில் பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டன.

ஆனால், அதனை முறையாக பராமரிக்காத நிலையில் கழிப்பிடங்கள் தற்போது மூடிக்கிடக்கின்றன. இதனால், அவசர தேவைகளுக்கு மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மார்க்கெட் பகுதியில் உள்ள பொது கழிப்பிடங்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேணடும். இலவச சிறுநீர் கழிக்கும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை