மாம்பழ வேட்பாளரை புறம்தள்ளிய இலை கட்சிக்காரங்க!

மாங்கனி மாவட்டத்தின் மேற்கு தொகுதியில் இலையின் கூட்டணியில் மாம்பழக்கட்சி வேட்பாளராக, கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அருள் நிற்கிறாரு. 2 நாட்களுக்கு முன்னாடி இலை கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்துச்சு. அதிமுக மாவட்ட செயலாளர் உள்பட யாரும் கூட்டத்துக்கு வரலை. ஒரே ஒரு பகுதி செயலாளர் மட்டும் மல்லுக்கட்டிக்கிட்டு நின்னாரு. இதனால வேட்பாளர் உண்மையிலேயே அதிர்ச்சியாகிட்டாரு. மைக்கை பிடித்து பேசும்போது, ‘‘ நான் பாமக வேட்பாளராக இருக்கலாம். வெற்றி பெற்றவுடன் அதிமுக எம்எல்ஏவாக மாறிடுவேன். உங்களது தொண்டனாகத்தான் இருப்பேன். நீங்கள் வருத்தப்படும் வகையில் நடந்துக்க மாட்டேன்’’ என்று நெஞ்சுருக பேசினாராம். இருமலுக்கு இடையே மீண்டும் பேசிய அவர், ‘‘இந்த தொகுதியில 60 சதவீத படிப்பறிவில்லாத மக்கள் மனதில் இலை ஊறிப்போச்சு. அவர்களிடம் மாம்பழ சின்னத்துக்கு ஓட்டுப் போட வைக்க வேண்டியது உங்களது கடமை’’ன்னு சொன்னாராம். இந்த தொகுதி அதிமுக பொறுப்பாளர்கள், அதிமுக மாவட்ட செயலாளர் போட்டியிடும் தொகுதியில வேலை செய்ய போயிட்டாங்களாம். இதனால அண்ணன் கடும் அதிர்ச்சியில இருக்காருன்னு மாம்பழ தொண்டர்கள் முணுமுணுத்துக்கிட்டே போனாங்க….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…