மாமல்லபுரம் அருகே பள்ளி நூலக சுவர்களில் விழிப்புணர்வு ஓவியம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே பள்ளி நூலக உட்புற சுவரில் விழிப்புணர்வு ஓவியங்களை மாணவ, மாணவிகள் வரைந்தனர். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளை அழகுபடுத்த இயற்கை சம்பந்தமான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகின்றனர். இதையொட்டி, மாமல்லபுரம் அடுத்த சாலவான்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் உள்ள நூலக கட்டிட உட்புற சுவரில், மாமல்லபுரம் சிற்ப கலை கல்லூரி மாணவர்கள், இயற்கை சம்பந்தமான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வண்ணம் தீட்டினர். அவர்களுடன், பள்ளி மாணவ, மாணவிகளும் ஓவியம் வரைந்து அழகுபடுத்தினர்.அதில், பள்ளி வளாகத்தில் மரங்கள் நட்டு பராமரிக்க வேண்டும். குழந்தைகள் புத்தகம் வாசிப்பது, விண்வெளி வீரர்கள், அறிவியல் சம்பந்தமானவை என பல்வேறு ஓவியங்கள் வரைந்து வண்ணம் தீட்டப்பட்டன. தொடர்ந்து, பள்ளி சுற்றுச்சுவர்களிலும்  வண்ண விழிப்புணர்வு ஓவியங்கள் வரைய உள்ளதாக மாணவ, மணவிகள் தெரிவித்தனர். அவர்களுடன் பள்ளி தலைமை ஆசிரியை ஜாக்லின்எஸ்தர் சாரா, உதவி தலைமை ஆசிரியை நவீதா உள்பட பலர் இருந்தனர்….

Related posts

திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை: மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்