மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை ரசித்த தேசிய ராணுவ கல்லூரி அதிகாரிகள்

மாமல்லபுரம்: டெல்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லூரியில் பணியாற்று 11 அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 5 ராணுவ அதிகாரிகள் என 16 பேர் நேற்று, மாமல்லபுரம் வந்தனர். அவர்களை, திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், விஏஓக்கள் நரேஷ்குமார், பூபதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர், புராதன சின்ன இடங்களுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து, ராணுவ கல்லூரி அதிகாரிகள் கடற்கரை கோயில் உள்பட புராதன சின்னங்களை பார்வையிட்டு, அதன்முன் நின்று குழுவாக புகைப்படம் மற்றும் தங்களது செல்போனில் செல்பி எடுத்து கொண்டனர். இங்குள்ள, மூத்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர், புராதன சின்னங்களின் சிறப்பு, எந்த காலத்தில் எந்த மன்னரால் உருவாக்கப்பட்டது என்பது குறித்து தெளிவாக விளக்கம் அளித்தார். ராணுவ கல்லூரி அதிகாரிகள் மாமல்லபுரம் வருகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை