மானாங்குடி ஊராட்சியில் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்

மண்டபம்,ஜன.10: மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் மானாங்குடி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மானங்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் பரமேஸ்வரி தலைமை வகித்தார். விழிப்புணர்வு பிரசாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பாலியல் குற்றங்கள் குறித்து கிராம சாலையில் பல கலர் கோலப்பொடியால் பெண்களை பாலியலுக்காக பார்க்காதே, உன் வாழ்வியலுக்காக பார்.

உன் காமத்தை பெண்கள் மீது காட்டாதே, பெண்களிடம் உன் கண்ணியத்தை காட்டு என்ற வாசகங்கள் எழுதப்பட்டு பல வர்ணங்களில் சித்தரித்து இருந்தனர்.  பிரசாரத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்தும்,போக்சோ சட்டம் குறித்தும், 21 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கே திருமணம் நடத்த வேண்டும் என்பது உள்பட பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து தீபம் ஏற்றி கோஷமிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை