மாந்தோப்பில் பிடிபட்ட மலைப்பாம்பு

சிங்கம்புணரி, ஜூன் 7: சிங்கம்புணரி அருகே மேலப்பட்டி கிராமத்தில் குடியிருப்பு அருகே உள்ள மாந்தோப்பில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு சுற்றித் திரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், சிங்கம்புணரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் 6 தீயணைப்பு வீரர்கள் சென்றனர். அங்கு மலைப்பாம்பு மற்றும் சாரை பாம்புகள் இருப்பதை பார்த்தனர். உடனடியாக 10 அடி நீள மலைப் பாம்பையும், 8 நீளம் உள்ள சாரை பாம்பையும் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் பிரான்மலை வனப்பகுதியில் பாம்புகள் விடப்பட்டது.

Related posts

விஜயநகர் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ரயில் நிலையம் அருகே ஒதுக்கிய 6 ஏக்கர் நிலத்தில் வேளச்சேரி பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

தமிழக அமைச்சரவையில் அனைத்து சமுதாயங்களுக்கும் பிரதிநிதித்துவம்: ராமதாஸ் புகாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

3 கோட்டங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: இன்று நடக்கிறது