மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் சேவையுடன் அடுத்தடுத்த பஸ் நிறுத்தம் குறித்த அறிவிப்பு, சேவை தொடக்கம்; உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில், பயணிகளின் வசதிக்காக பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை முன்னரே அறிவிக்கும் வசதி நேற்று  அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, மாநகர போக்குவரத்து கழகத்தின் 150 பேருந்துகளில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இதனை சென்னை பல்லவன் இல்லத்தில் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் சென்னை மாநகர பேருந்துகளில்  பயணம் செய்யும் பயணிகள், அடுத்து வரும் நிறுத்தங்களை தெரிந்துகொள்ள வசதியாக 300 மீட்டர் தூரத்திற்கு முன், நிறுத்தங்களின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பு செய்யும் வகையில் போக்குவரத்து துறை இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பேருந்துகளின் உட்புறத்தில் ஜிபிஎஸ் உதவியுடன் முன்பக்கம், பின்பக்கம், பக்கவாட்டு பகுதிகளில் தலா 2 என 6 ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்புகளின் இடையே விளம்பரங்கள் ஒலிபரப்பப்பட்டு போக்குவரத்து கழகத்திற்கு அதன் மூலம் வருவாய் திரட்டப்படும் எனவும் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சேவையை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ., பல்லவன் இல்லத்தில் இருந்து கலைஞர் நினைவிடம் வரை பேருந்தில் பயணம் செய்தார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை