மாநகர் மாவட்ட காங். சார்பில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை ஓராண்டு நிறைவு பேரணி

கோவை, செப். 8: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், ராகுல்காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரை ஓராண்டு நிறைவு பேரணி கோவை கீதா ஹால் ரோட்டில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நேற்று துவங்கியது. இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று, ரேஸ்கோர்ஸ் சி.சுப்பிரமணியம் சிலையை அடைந்தது. மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்பசாமி தலைமை தாங்கி, இப்பேரணியை துவக்கிவைத்தார். மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், எச்.எம்.எஸ். தலைவர் ராஜாமணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சங்கர், சரளா வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழ்செல்வன், இராம.நாகராஜ், ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, தாமஸ் வர்க்கீஸ், ஜெரோம் ஜோசப், காந்தகுமார், குறிச்சி வசந்த், சுரேஷ், பழனிச்சாமி, காட்டூர் தனசேகரன், திலகவதி, ஜேம்ஸ்குமார், ராமன், வினோத், முருகன், அஸ்மத்துல்லா, பேரிங் பாபு, அம்மாஸ் அபு, சசிதரன், விக்னேஷ், சுதன், அனீஸ், துரைசாமி, தங்கம் பழனிச்சாமி, தேவராஜ், சந்திரன், கருடா பாலு, இருகூர் செல்வம், சச்சின் சிவக்குமார், ஆறுமுகம், ஸ்ரீதர், முனுசாமி, காமராஜ், சுலைமான், முஸ்தபா, என்.ஜி.ஆர்.செல்வன், சூரியபிரகாஷ், கிளின்டன், அமீன், சந்தோஷ், மோகன்ராஜ், காமராஜ், சிவபெருமாள், நசீர், முத்துசாமி, மஸ்தான், முனுசாமி, உமாகேஸ்வரி, உமாராணி, லீமா ரோஸ், உஷா, செல்வி, மரகதம்மாள், ராஜேஸ்வரி, விக்னேஷ், கோவை தாமஸ், சிவக்குமார், ஆரோக்கியதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை