மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ் தலைவர்): சொத்து வரி உயர்வை ஒரே கட்டமாக நடைமுறைக்கு கொண்டு  வராமல், ஆண்டுக்கு 10% வரி உயர்வு என்ற அடிப்படையில் மறுபரிசீலனை  செய்து புதிய அறிவிப்புவெளியிட வேண்டும்.முத்தரசன் (சிபிஐ, மாநில செயலாளர்): தமிழக அரசு நகர்ப்புற சொத்துவரி உயர்வை நிறுத்தி வைத்து, மறுபரிசீலனை செய்து, வெகுவாக குறைக்க முன்வர வேண்டும்.கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம், மாநில செயலாளர்): விலை உயர்வு, வேலையின்மை போன்ற பல நெருக்கடிகளால் மக்கள் தவிக்கின்றனர்.  தமிழக அரசு, அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி விகிதாச்சார உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்.ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): தமிழ்நாட்டின் தற்போதைய சூழலில் சொத்து வரியை உயர்த்தாமல், மாற்றுத்திட்டத்தின் மூலம் வருவாயைப் பெருக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அன்புமணி ராமதாஸ்(பாமக இளைஞரணி தலைவர்): சொத்துவரி உயர்வு சொத்து வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்காது. வாடகை உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களையும் பாதிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு நகரப்பகுதிகளில் சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். டி.டி.வி.தினகரன்(அமமுக பொது செயலாளர்): கொரோனா பாதிப்புக்கு பிறகு இயல்புநிலை இப்போதுதான் இயல்பு நிலை ஏற்படத்தொடங்கி இருக்கிறது. எனவே, சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்.நெல்லை முபாரக்(எஸ்.டி.பி.ஐ.கட்சி தலைவர்): அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சிரமங்களை சந்தித்து வரும் மக்களுக்கு சொத்துவரி உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். எனவே சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்