மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் மேயர் கோரிக்கை மனுக்கள் பெற்றார்

 

திருச்சி, அக்.8: திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகர மேயர் அன்பழகன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மனுக்களில் சாலை வசதி, குடிநீர் வினியோகம், பாதாள சாக்கடை இணைப்பு, மின்தடை, சுகாதாரம் தொடர்பான கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தது. மனுக்களின் மீது உரிய கவனம் செலுத்தி, கள ஆய்வு மேற்கொண்டு உரிய தீர்வு காண துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, மாநகராட்சி துணை கமிஷனர் பாலு, மண்டத் தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி, ஜெயநிர்மலா, நகர் நல அலுவலர் மணிவண்ணன், செயற்பொறியார்கள், மாநகராட்சி உதவி கமிஷனர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும்

ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்