மாதவரம் மண்டலம் 31-வது வார்டில் ரூ.20 லட்சம் செலவில் புதிய தரைப்பாலம் கட்ட பூமி பூஜை

புழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம் 31வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அறிஞர் அண்ணா நகரில், மழைக்காலங்களில் மாதவரம் ரெட்டேரியில் தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும். இதனால், அப்பகுதியில் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, அறிஞர் அண்ணா நகர் பிரதான சாலை நாகமுத்து மாரியம்மன் கோயில் அருகே பழைய தரை பாலத்தை இடித்து புதிய பாலத்தை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன் பூமிபூஜை நேற்று நடைபெற்றது. மாநகராட்சி வார்டு கவுன்சிலர் சங்கீதாபாபு தலைமையில், மாதவரம் மண்டல அலுவலர் முருகன், செயற்பொறியாளர் சுந்தரேசன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 31 வது வட்ட திமுக செயலாளர் சுரேஷ், வட்ட நிர்வாகிகள் பொன் சதீஷ்குமார், சரவணன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை