மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்க சமையல் அறை கட்டும் பணி; கலெக்டர் நேரில் ஆய்வு

செங்கல்பட்டு: பேராமனூர் ஊராட்சியில் சமையல் அறை கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி சார்பில்,  பேராமனூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும், மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்குவதற்காக மைய சமையல் அறை கட்டும் பணியினை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் நேற்று   பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் சசிகலா, மறைமலைநகர் நகராட்சி தலைவர் ஜெ.சண்முகம் நகராட்சி ஆணையாளர் எஸ்.லட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். இதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் காமராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும், மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்குவதற்காக மைய சமையல் அறை கட்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது  நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஆணையாளர் இளம்பரிதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை