மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

நிலக்கோட்டை, மே 19: நிலக்கோட்டையை அடுத்த இந்திராநகர் கிராம பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிலக்கோட்டையை அடுத்த மாலையகவுண்டன்பட்டி ஊராட்சி இந்திராநகர் பகுதியில், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சைல்டு வாய்ஸ் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் இணைந்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றோர், தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் உட்பட அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள், கட்டாய கல்வி திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வளர் சரவணக்குமார் தலைமை வகித்தார். தொண்டு நிறுவன தலைவர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். வளர் இளம் பெண்கள் குழு உறுப்பினர் இந்திரா வரவேற்றார். முன்னதாக இந்திராநகர் காளியம்மன் கோயில் முன்பாக துவங்கிய பேரணியின் முடிவில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. முடிவில் சமுதாய ஆதரவு குழு தலைவர் சத்தியா நன்றி கூறினார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை