மாணவர்கள் வேண்டுகோள் புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனையில் 85 வயது முதியவருக்கு இருதய ஸ்டென்ட் பொருத்தி மருத்துவர்கள் சாதனை

புதுக்கோட்டை:புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருமயத்தை சார்ந்த சுப்பையா (85) என்ற நோயாளி அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்துள்ளார். அவரை பரிசோதித்த இருதய சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் மனோஜ் மற்றும் தியாகராஜன் அவர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் இருதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் மோசமான அடைப்பு ஏற்பட்டுள்ளதற்கு உடனடியாக ஸ்டண்ட் பொருத்தி இருதயத்திற்கு ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும் முயற்சியாக நோயாளியை கேத் லேப் எனப்படும் எனப்படும் இருதய உள் ஊடுருவி மையத்தில் அவருக்கு ஸ்டண்ட் சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளி சுப்பையா அவர்கள் காப்பாற்றப்பட்டார். மேலும் இருதய மருத்துவர் மனோஜ் கூறுகையில் இது போன்ற மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளை விரைவாக கேத் லேப் வசதி உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வதன் மூலம் இருதய ரத்த குழாய் அடைப்பை சரி செய்து நோயாளியை உயிர் பிழைப்ப வைக்கலாம் என தெரிவித்தார். மேலும் இதுபோன்று மருத்துவமனையில் புதுக்கோட்டை 500க்கும் முத்து மீனாட்சி மேற்பட்டவர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர். பெரியசாமி தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட சுற்றுவட்டாரத்தில் உயர் ரக கேத் லேப் வசதி முத்து மீனாட்சி மருத்துவமனையில் இருப்பதால் அவசர நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளித்து எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருவதாக மருத்துவமனையின் செயல் அலுவலர் திரு பிரேம்குமார் ராஜன் தெரிவித்தார். நோயாளி சுப்பையா அவர்களின் உறவினர்கள் மருத்துவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை