மாணவர்கள் படியில் தொங்கி பயணம் செய்வதை தவிர்க்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

 

அறந்தாங்கி,டிச.2: மாணவர்கள் படியில் தொங்கி பயணம் செய்வதை தவிர்க்க நாகுடி பகுதிகளில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். கூட்டத்தின் போது நாகுடி பகுதிகளில் இருந்து சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள், பெண்கள், மேல்நிலைப்பள்ளியில் அதிகளவில் மாணவர்கள் பயில்வதால் பள்ளிக்கு சென்று வர போதிய பேருந்து வசதி இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் செல்லும் நிலை இருக்கிறது.

இதனால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். நாகுடி பேருந்து நிலையத்திலிருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலை குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. இச்சாலையை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். நாகுடி பகுதியில் தற்போது பயிர் செய்துள்ள சம்பா பயிர்களில் அதிகளவில் கலைகளும் புதிய புதிய நோய்கள் பரவுகிறது. இதை கட்டுப்படுத்திட வேளாண் அதிகாரிகள் நாகுடி பகுதியில் முகாம் அமைத்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகுடி பேருந்து நிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்என வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் தண்டாயுதபாணி, லட்சுமணன், அமிர்தம், சுமதி, செல்லத்துரை, சுப்பிரமணியன், தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை