மாணவர்கள் எதிர்காலத்தை கருதி தமிழக அரசுக்கு சொந்தமான பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் அனுமதி தர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மாணவர்கள் உயர்கல்வி, வேலை வாய்ப்பு, எதிர்காலத்தை கருதி தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி தர வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பட்டமளிப்பு விழா தாமதத்துக்கு ஆளுநர் மாளிகை இன்னும் அனுமதி அளிக்காததே காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன. 2021 – 22 கல்வியாண்டில் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு 6 மாதத்துக்கு மேலான நிலையில் பட்டமளிப்பு விழா நடக்கவில்லை. தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா முடிந்து சான்றிதழ்கள் டிசம்பருக்குள் வழங்கப்படுவது வழக்கம். பட்டமளிப்பு விழா நடைபெறாததால் ஜூனில் வழங்கப்பட்ட தற்காலிக சான்றிதழும் 6 மாதம் ஆனதால் காலாவதியாகிவிட்டது. மாணவர்களுக்கு நிலையான பட்டச்சான்றிதழ் வழங்காததால் உயர்கல்வி, வேலை வாய்ப்பு கை நழுவும் ஆபத்து உள்ளது. எனவே மாணவர்கள் உயர்கல்வி, வேலை வாய்ப்பு, எதிர்காலத்தை கருதி தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி தர வேண்டும் என ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு