மாணவர்களுக்கு பாராட்டு விழா

ஓசூர், ஜூலை 29: ஓசூர் கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணை பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், மறுவாழ்வு மக்கள் மன்றம் சார்பில், தமிழகத்தில் 103 முகாம்களில் உள்ள மாணவ, மாணவிகள் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு பொதுதேர்வில், மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாரட்டு விழா நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக, ஓசூர் தாசில்தார் விஜயகுமார், இலங்கை தமிழர் முகாம் வருவாய் ஆய்வாளர் அன்பு, திமுக ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி, கேடயம் வழங்கி பாராட்டினர். இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திமுக நகர பொருளாளர் தியாகராஜன், மக்கள் மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் கெலவரப்பள்ளி அணை முகாமின் துணைத்தலைவி சாரதாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி