மாடுகள் வரத்து அதிகரிப்பு

சேந்தமங்கலம், மே 1: புதுச்சத்திரம் ஒன்றியம், புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெறும் சந்தையில் மாடுகளை வாங்க, விற்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் வருகின்றனர். நேற்று கூடிய சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இருந்து மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தது. கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் இறைச்சி மாடுகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், மாடுகளை வாங்க வெளி மாநில, மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். கேரளாவில் இறைச்சி நுகர்வு அதிகரித்து உள்ளதால் அங்கிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மாடுகளின் விலை உயர்ந்தது. இறைச்சி மாடுகள் ₹29 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ₹47 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் ₹19 ஆயிரத்திற்கு விற்பனையானது. மொத்தமாக ₹2.80 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து