மாஞ்சா நூல் தயாரித்து விற்றால் குண்டாஸ்; போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள், என போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடை காலத்தையொட்டி சென்னை மாநகரில் பல இடங்களில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு தொடர் புகார்கள் வந்தன. அதன்பேரில், சென்னை மாநகர காவல் எல்லையில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் நபர்களை கண்காணிக்க ஒவ்வொரு காவல் மாவட்டங்கள் வாரியாக ஏற்கனவே அமைக்கப்பட்ட தனிப்படையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி சில இடங்களில் மாஞ்சா நூல்கள் மூலம் அபயகரமான வகையில் பட்டம் விடப்படுகிறது.  இதையடுத்து சென்னை மாநகர காவல் எல்லையில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்ய நேற்று முன்தினம் முதல் வரும் செப்டர்பர் 6ம் தேதி வரை, அதாவது 60 நாட்கள் சென்னை மாநகர காவல் எல்லையில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை மீறி யாரேனும் சட்டவிரோதமாக மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்தால் அல்லது மாஞ்சா நூலில் பட்டம் விட்டாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மாஞ்சா நூல் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுக்க சென்னை மாநகர காவல் எல்லையில் தனிப்படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை