மாஜிஸ்திரேட் கோர்ட் அமையும் இடத்தை நீதிபதி நேரில் ஆய்வு

குமாரபாளையம், மே 18: குமாரபாளையம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், பள்ளிபாளையம் ரோடு எம்ஜிஆர் நகரில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. புதிய நீதிமன்ற வளாகம் அமைக்க, அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதை அடுத்து, வெப்படையில் இருந்து குமாரபாளையம் செல்லும் வழியில் மேட்டுக்கடை பகுதியில் நீதிமன்றம் அமைத்துக்கொள்ள தனியார் ஒருவர் 2.26 ஏக்கர் நிலம் தானமாக வழங்கியுள்ளார். இந்த இடத்தில் நீதிமன்றம் அமைவதற்கான சாத்தியகூறுகள் குறித்து, மாவட்ட நீதிபதி குணசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீதிமன்ற கட்டிடத்திற்கான இடத்தை பரிசீலனை செய்த மாவட்ட நீதிபதியை, குமாரபாளையம் வக்கீல் சங்க தலைவர் சரவண ராஜன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், நீதிபதியின் பரிசீலனையில் உள்ள இடம் போக்குவரத்து வசதியற்றது. பெண்கள், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதில் சிரமம் உள்ளது. போதிய பாதுகாப்பு இல்லை. எனவே, குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள இடத்தை தேர்வு செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டனர். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்து, நீதிபதியின் கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து