மாசி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

வத்திராயிருப்பு:  மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே வத்திராயிருப்பு மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் உள்ளது. அமாவாசை, பௌர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மாசி பவுர்ணமியை முன்னிட்டு, கடந்த 14ம் தேதி முதல் சுவாமி தரிசத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இன்று வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் மாசி பவுர்ணமி தினமான நேற்று அதிகாலை 2 மணி முதல் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். சென்னை, கோவை, நெல்லை, சேலம், திருச்சி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வாகனங்களில் பக்தர்கள் வந்தனர். இதனையடுத்து காலை 6.30 மணியளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது. மாசி பவுர்ணமி தினம் என்பதால் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பங்கேற்ற ஏராளமான சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் முடிகாணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.  …

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!