மாங்கனி வேட்பாளர்களை ஓரங்கட்டிய இலை கட்சியினரை கண்டித்த முதல்வர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கோவை சூலூரில் என்ன நடக்குது… தேர்தல் சூறாவளியில் இலைகள் எல்லாம் வேறு பக்கம் பறக்குதாமே… அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதியில் இலை சார்பில் சிட்டிங் மக்கள் பிரதிநிதி தான் களத்தில் இருக்கிறார். அவருக்கு எதிராக பிரிமியம் பெயரை கொண்டவர் நிற்கிறார். இங்கே தான் டிவிஸ்ட்… இந்த தொகுதியில் இலைக்கு  வாக்கு வங்கி அதிகமாம். இதனால ஈசியா ஜெயித்துடலாம்னு நினைச்ச சிட்டிங் மக்கள் பிரதிநிதி அதிர்ச்சியில் இருக்கிறாராம். காரணம், ஓட்டை பஸ்சில் இருந்து ஓடும் பஸ்சில் ஏற சூலூரில் உள்ள இலை தரப்பு நிர்வாகிகள் முடிவு செய்து  இருக்கிறார்களாம். அதாவது, இலை கட்சி நிர்வாகிகள் கொஞ்சம், கொஞ்சமாக அந்த கூடாரத்தை காலி செய்துவிட்டு, சூரியன் பக்கம் சாய்கிறார்கள். சமீபத்தில், ஒன்றிய துணை தலைவர் ஒருவரும் இலையில் இருந்து மாயமாகி சூரியன் பக்கம் வந்துட்டாராம்.  இவரை தொடர்ந்து, இன்னும் ஐந்து தலைவர்கள் சூரியன் பக்கம் தாவப்போவதாக தகவல் பரவி வருகிறது. இதனால், ஆளும்கட்சி நிர்வாகிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தேர்தல் நாளில் தான் ஆளுங்கட்சி தொல்லை இருக்காது என்று ஊரக வளர்ச்சி துறையில் கல்லா கட்டி வரும் அதிகாரியின் ஆட்டத்தை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் ஊரக வளர்ச்சித்துறையில் தோண்டதோண்ட பூதம் கிளம்பும் என்றாலும், இப்போது சட்டமன்ற தேர்தல் வேலையில் மற்ற அதிகாரிகள் மூழ்கி இருக்கிறார்கள். அதை பயன்படுத்தி ஊரக வளர்ச்சி துறை அதிகாரி, தனது துறையின்  மாவட்ட உயரதிகாரியுடன் சேர்ந்து சத்தமின்றி கல்லா கட்டி வருகிறாராம். 15வது நிதிக்குழு மானியத்தில் தரம் இல்லாத எல்இடி பல்புகளையும், ஹைமாஸ் விளக்குகளையும் பொருத்தும்படி ஊராட்சி செயலாளர்களை மிரட்டுகிறாராம்.  ஏற்கனவே லைட் நல்லா எரிந்து கொண்டு இருந்தாலும், மாற்றச் சொல்கிறாராம். இந்த பல்புகளும், ஹைமாஸ் விளக்குகள், கம்பங்கள் அனைத்தும் பல மடங்கு விலை நிர்ணயித்து வாங்கப்பட்டுள்ளதாம். இப்பணியை விரைந்து முடித்துவிட  வேண்டும் என்று கண்டிப்பாம். அதுவும் சட்டமன்ற தேர்தல் முடிவதற்குள் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு பணத்தை கான்ட்ராக்டர்களுக்கு செட்டில் செய்ய கறாராக சொல்லி இருக்கிறாராம். ஏற்கனவே உள்ளூரில் கிடைக்கக்கூடிய நீர்மூழ்கி மோட்டார்கள், தானியங்கி  சுவிட்சுகளை திருப்பூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து ஊராட்சி செயலர்களிடம் தள்ளியுள்ளாராம். நீர்மூழ்கி மோட்டார்கள் தேவையில்லாத ஊராட்சிகளிலும் கட்டாயப்படுத்தி தள்ளப்பட்டுள்ளதாம். இந்த  மோட்டார்கள் மூன்று மடங்கு விலை நிர்ணயிக்கப்பட்டு பில் வழங்கப்பட்டு காசோலைகள் கொடுத்து கமிஷன் வாங்கிட்டு வர்றாங்களாம். ஏற்கனவே விஜிலென்ஸ் போலீசாரிடம் பிடிபட்டுள்ள இந்த அதிகாரி அதைப்பற்றி கவலையே  படவில்லையாம். ஏற்கனவே ஊராட்சி பம்ப் ஆபரேட்டர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும், குடிநீர், தெருமின்விளக்கு பராமரிப்புக்கு பணமின்றியும் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்களாம்… இது எல்லாம்  தேர்தலுக்கு பிறகு முடிவுக்கு வரும் என்று நல்ல நாளை எதிர்நோக்கி இருப்பதாக கீழ்நிலை அதிகாரிகள் நம்பிக்கையோடு இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாங்கனி மாவட்டத்துல மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட, மாநகர நிர்வாகிகள் ஒதுங்கிக்கொள்ள வார்டு செயலாளர்கள் வரிந்து கட்டி வேலை செய்யறாங்களாம்… இதனால டென்ஷன் ஆன முதல்வர், தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கி  உள்ளவர்களை கடிந்து கொண்டாராமே..’’ என்று ஆச்சர்யத்தோடு கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘மாங்கனி மாவட்டத்தில் இலை மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்க முக்கிய நிர்வாகிகளும், சிட்டிங் எம்எல்ஏக்களும் கொஞ்சம் ஒதுங்கியே நிக்குறாங்களாம். கருத்து கணிப்புகளால் உற்சாகம் இழந்ததே இதற்கு காரணமாம். அதே  நேரத்தில் வேட்பாளர்களே வராவிட்டாலும் வார்டு செயலாளர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வாக்கு சேகரிக்கிறாங்களாம். ஏற்கனவே விவிஐபி அறிவித்த பம்பர் பரிசு இதற்கு ஒரு காரணமாம். ஆனால் இன்னொரு காரணமும் இருக்காம். அசெம்ப்ளி எலக்‌ஷன் முடிந்தவுடன் கண்டிப்பாக முனிசிபாலிடி, கார்ப்பரேஷன் எலக்‌ஷன் நடக்கும். இப்ப நடக்கும் எலக் ஷனில் வார்டு வாரியா அதிக ஓட்டு வாங்குறவங்களுக்கு அப்ப வரப்போற எலக்‌ஷன்ல வாய்ப்பு தரப்போறதாகவும் பேச்சாம்.  இதனால் தான், வேட்பாளரே வராவிட்டாலும் வார்டு செயலாளர்கள் வரிசை கட்டி ஓட்டு கேட்கிறாங்களாம். இதில் பாதிக்கப்படவங்க, இலையின் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தானாம். அவர்கள் ஓட்டு கேட்கச் செல்லும் ஒரு சில  இடங்களில் லென்ஸ் வச்சு தேடினாலும் இலைகட்சிகாரர்களை பார்க்க முடியலியாம். இந்த விவகாரம் சமீபத்தில் ஊருக்கு வந்த விவிஐபியின் கவனத்துக்கு போச்சாம். கூட்டணி கட்சிக்காரங்க வெற்றியும் நமக்கு முக்கியம். அவங்க கூடயும்  ேபாய், நீங்கெல்லாம் ஓட்டு கேளுங்க என்று கண்டிச்சாராம்…’’ என்றார் விக்கியானந்தா.     …

Related posts

குக்கர் தலைவரின் மெகா பிளானுக்கு தடை போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ள பலாப்பழக்காரரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

மலராத கட்சி ஒருங்கிணைப்பாளர் நொந்து போய் கிடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா