மஹாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை!: ஒரேநாளில் 100க்கும் மேற்பட்ட முகாம்கள் மூடல்..!!

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மஹாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினசரி சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி கையிருப்பு குறித்து பேட்டியளித்த மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப், மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும் பற்றாக்குறையால் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி பற்றாக்குறை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனிடம் தெரிவித்துள்ளதாகவும், பற்றாக்குறையால் மும்பையில் 26 முகாம்களும், புனேவில் 100 முகாம்களும் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேபோல் டெல்லியிலும் இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லி அரசை குற்றம்சாட்டுவதை விடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, மத்திய அரசு அடுத்த இரு தினங்களுக்குள் போதிய கொரோனா தடுப்பூசிகளை அனுப்பாவிட்டால் ஒடிஷா மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். …

Related posts

நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களிடம் தவறாக நடக்கக்கூடாது: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அறிவுரை

நில முறைகேடு வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம்; சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு: முதல்வர் பதவிக்கு ஆபத்து

கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா..? முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்