மழை எப்ப வருமோ?…

கோவை: கோவை வனக்ேகாட்டத்தில் வாகை, குமிழ், நெல்லி, அகில், புங்கன், மூங்கில் மரங்கள் அதிகமாக வளர்ந்திருந்தன. இவை யானைகளின் முக்கிய உணவாக இருக்கிறது. கடந்த சில ஆண்டாக மூங்கில் உள்ளிட்ட சில வகை மரங்களின் பெருக்கம் குறைந்து வருகிறது. மழையின்மை, வறட்சியால் பசுமை மாறாக காடுகள், முட்புதர் காடுகளாக மாறி வருகிறது. கட்டுமானம், கலை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றிக்காக மூங்கில் மரங்கள் அதிகளவு அழிக்கப்பட்டு வருகிறது. மூங்கில் மரங்கள் 17 முதல் 19 சதவீதம் வரை குறைந்து விட்டதாகவும், ஈச்சம்புற்கள் காய்ந்து வனப்பகுதி பொட்டல் வெளியாகி மாறி விட்டதாக தெரியவந்துள்ளது. வனத்துறையினர் மூங்கில் மரங்களை வளர்க்க, பாதுகாக்க ஆர்வம் காட்டவில்லை. மூங்கில், கோரை, ஈச்சம்புற்கள், நீரோடை இல்லாத வறண்ட வனத்தில் வசிக்கும் யானைகள் கிராம தோட்டங்களில் சோளம், வாழை, தென்னை தேடி அலைவதாக புகார் பெறப்பட்டுள்ளது. கோடை காலம் முடிந்து பருவ மழை பெய்யாமல் வனப்பகுதி காய்ந்து கிடக்கிறது. குறிப்பாக எவர் கிரீன் வனமான மேற்கு தொடர்ச்சி மலை, பல இடங்களில் காய்ந்து வளமின்றி கிடக்கிறது. நீர் தேக்கங்களிலும் போதுமான நீர் இல்லை. இதனால் வன விலங்குகளின் உணவு, தண்ணீர் தேவை அரிதாகிவிட்டது. மழை வந்தால்தான் வனத்தில் வறட்சி நிலை மாறும். காய்ந்து கிடக்கும் வனத்தை பசுமை பகுதியாக மாற்ற வனத்துறையினர் மழை வருகைக்காக காத்திருக்கின்றனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி