மழையால் அறுந்து விழுந்த மின்கம்பி

 

கடத்தூர், செப். 2: கடத்தூர் பேரூராட்சி 5வது வார்டு சிந்தல்பாடி சாலையில், நேற்று மாலை கனமழை பெய்தது. இதில் அங்குள்ள மரங்கள் முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. அப்போது கடத்தூர் ஆதிதிராவிடர் நல விடுதி மற்றும் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

தகவலின் பேரில் விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கடத்தூர் மின்கோட்ட செயற்பொறியாளர் செந்தில்ராஜ் கூறுகையில், ‘மரம் விழுந்த இடத்தில் மட்டும் மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. மழை பெய்யும் போது, கால்நடைகளை மின்கம்பத்தில் கட்ட கூடாது, பொதுமக்கள் மின் வாரியத்தின் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும்,’ என்றார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்