மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி-நகர்மன்ற தலைவர் ஆய்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகராட்சியில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள், நகர்மன்ற தலைவர் முன்னிலையில் நடந்தது. கிருஷ்ணகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகராட்சி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக மழைநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கால்வாய்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், நகராட்சிக்குட்பட்ட 4, 5, 6, 19 மற்றும் 27வது வார்டுகளில் மழைநீர் கால்வாயில் தூர்வாரும் பணி மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்றும் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார்.இதையடுத்து நகராட்சி பொறியாளர் சரவணன் மற்றும் நகராட்சி துப்புரவு அலுவலர் மற்றும் ஆய்வாளர்களை குழுவாக அமைத்து, நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம், டிராக்டர்களை கொண்டு கால்வாயில் தூர்வாரும் பணி மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இந்த பணியின் போது, நகர்மன்ற உறுப்பினர்கள் மீன் ஜெயக்குமார், சுதா சந்தோஷ், தேன்மொழி மாதேஷ், முகமதுஅலி, மீனா நடராஜன், சுனில்குமார், செந்தில்குமார், பிர்தோஸ்கான், திமுக வட்ட செயலாளர் சரவணன், கனல் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து தினமும் காலை 6 மணிக்கு வார்டுகளுக்கு செல்லும் நகர்மன்ற தலைவர், துப்புரவு பணிகள் சரிவர நடைபெறுகிறதா என்பதையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்….

Related posts

திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்; நெடுந்தூர சிறப்பு ரயில்கள் கன்னியாகுமரிக்கு வருமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

மெரினாவில் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை

குடியாத்தம் அருகே நள்ளிரவு ஒற்றை யானை அட்டகாசம் நெற்பயிர்கள் சேதம்: பொதுமக்கள் அச்சம்