மலைப்பாதையில் பாதுகாப்பாக இயக்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

கோத்தகிரி :  கோத்தகிரியில் சுற்றுலா வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் பயணிக்கும் போது சாலை விதிகளை பின்பற்றுமாறு போக்குவரத்து போலீசார் வலியுறுத்தினர்.நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக அதிக அளவு சுற்றுலா வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இந்நிலையில் சமவெளிப் பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்களே அதிக அளவு விபத்துக்குள்ளாகிறது.எனவே கோத்தகிரி போலீசார் மூலம் சமவெளிப் பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு மலைப்பாதையில் எவ்வாறு பயணத்தை மேற்கொள்வது, மலைப்பாங்கான இடங்களில் கட்டாயம் வாகனத்தை இரண்டாவது கியரில் இயக்க வேண்டும்,இரவில் பயணிக்கும் போது வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்த கூடாது, சாலையில் உலா வரும் வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது, மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள சாலைவிதி குறியீடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.  இதில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணனக்குமார், உதவி ஆய்வாளர் ஜான், காவலர் அப்பாஸ் மூலம் உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மலைப்பகுதிகயில் அதிக அளவு டெம்போ டிராவலர் வாகனங்களே விபத்திற்குள்ளாவதால் சுற்றுலா வந்த வாகன ஓட்டி மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது….

Related posts

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

கோயம்பேடு மார்க்கெட்டில் கழுவி சுத்தப்படுத்தி விற்பனை செய்த அழுகிப்போன காய்கறிகள் பறிமுதல்