மருத்துவமனைக்கு பொருட்கள் வழங்கல்

கீழக்கரை, மே 11: கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கீழக்கரை,ஏர்வாடி காஞ்சிரங்குடி, கும்பிடு மதுரை, நத்தம், மாயாகுளம் போன்ற 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள் பயன்படுத்துவதற்காக இஸ்லாமியா கல்வி நிறுவனம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கட்டில் மெத்தை மற்றும் உபகரண பொருட்களை இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம், கீழக்கரை அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைனிடம் வழங்கினார். அப்போது உதவி மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள், இஸ்லாமியா பள்ளியின் கணக்காளர் மலைச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி