மருது சகோதரர்களின் 221-வது நினைவு தினம் அனுசரிப்பு: மருது உருவ சிலைகளுக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கை: வெள்ளையர்களை எதிர்த்து வீரத்துடன் போர் புரிந்த மருதுபாண்டியர்களின் 221-வது நினைவு நாளையொட்டி அவர்களது நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட தினமான அக்டோபர் 24-ம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு மண்டப வளாகத்தில் சமுதாய மக்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். மருது பாண்டியர்களின் உருவ சிலைகளுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், மூர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நினைவு தூணுக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து வணங்கினர். மருது உருவ சிலைகளுக்கு மதுரை ஆதினம் மரியாதை செலுத்தினர்.மதுரை ஆதினம் சார்பில் விடுதலை போராட்ட தியாகிகளை நினைவு கூறும் விதமாக மருது சகோதரர்களின் நினைவாக அஞ்சல் தலையை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைபோன்று பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் சமூக அமைப்புகளும் மருது சகோரதரர்களின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்….

Related posts

தமிழ் மின் நூலகம் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை..!!

தமிழ் மின் நூலகம் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை

மதுரை மீனாட்சியம்மன் கோயில் லட்டு தரமாக உள்ளது: உணவு பாதுகாப்புத் துறை