மருதுபாண்டியர்கள் குருபூஜையில் அமைச்சர்கள் பங்கேற்பு

 

சிவகங்கை, அக்.23: திருப்புத்தூரில் நாளை நடைபெற உள்ள மருது பாண்டியர்கள் குருபூஜையில் அமைச்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். திருப்புத்தூரில் மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட அக்டோபர் 24அன்று அவர்களது நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அரசின் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.

இந்த ஆண்டு நாளை திருப்புத்தூரில் உள்ள மருது பாண்டியர் நினைவிடத்தில் அவர்களது சிலைகளுக்கும், தூக்கிலிடப்பட்ட இடத்திலும் அமைச்சர்கள் கேஆர்.பெரியகருப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நாளை காலை 9 மணி அளவில் மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர். காலை 8 மணியளவில் கலெக்டர் ஆஷா அஜித் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

Related posts

செங்குன்றம் அருகே ஸ்ரீஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கடந்த 2 நாட்கள் நடைபெற்ற மாநகராட்சி சிறப்பு முகாமில் ரூ.33.60 லட்சம் வரி வசூல்

திருத்தணி நகரமன்ற கூட்டம் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு தீர்மானம்