மராட்டிய மாநிலம் மும்பையில் ரூ.9கோடி மதிப்புள்ள ஆம்பர்கிரீஸ் பறிமுதல்: 5 பேர் கைது

மும்பை: மராட்டிய மாநிலம் மும்பையில் ரூ.9கோடி மதிப்புள்ள ஆம்பர்கிரீஸை காவல்துறை பறிமுதல் செய்தது. திமிங்கலத்தின் வயிற்றில் உருவாகி அதனால் வெளியேற்றப்படும் மெழுகு போன்ற பொருள் தான் ஆம்பர்கிரீஸ் ஆகும். மருந்து தயாரிக்கவும் மிக விலை உயர்ந்த வாசனை திரவியம் தயாரிக்கவும் ஆம்பர்கிரீஸ் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ஆம்பர்கிரீஸின் விலை ரூ.1 கோடிக்கு விற்கப்படுவதால் அதற்கு மதிப்பு அதிகம். மும்பையில் சட்டவிரோதமாக 9 கிலோ ஆம்பர்கிரீஸ் வைத்திருந்த 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் என ஏமாற்றி வசூல் ஓட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக ரூ.1.25 கோடி மோசடி செய்த மேலாளர்: ஆந்திராவில் பதுங்கியவர் கைது

வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில் கடத்திய ரூ.22 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண்