மரவள்ளி கிழங்கு விலை தொடர் சரிவு

சேந்தமங்கலம், ஜன.8: சேந்தமங்கலம் வட்டாரத்தில் வரத்து அதிகரித்துள்ளதால் மரவள்ளி கிழங்கு விலை தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேந்தமங்கலம் வட்டாரம், பேளுக்குறிச்சி, கல்குறிச்சி, மேலப்பட்டி, சிங்களாந்தபுரம், புதுச்சத்திரம் வட்டாரம் மின்னாம்பள்ளி, திருமலைப்பட்டி, நவணி, உடுப்பம், குளத்துப்பாளையம், கொல்லிமலை வட்டாரம் அரியூர் நாடு, வளப்பூர் நாடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளிக் சாகுபடி செய்துள்ளனர்.

இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று செல்லப்பம்பட்டி, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்புகின்றனர். ஜவ்வரிசி ஆலையில் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவு சத்து புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த வாரம் ஒரு டன் மரவள்ளி ₹10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது டன் ₹500 வரை விலை குறைந்து ₹9500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல, சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு கடந்த வாரம் டன் ₹11,500க்கு விற்பனையானது. தற்போது ₹500 விலை குறைந்து டன் ₹11 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது மரவள்ளி அறுவடை காரணமாக, வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை