மரக்கன்றுகள் நடும் விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் காக்களூர் ஏரியில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து ஏரியை தூய்மைப்படுத்தவும், இதனை மேம்படுத்தும் வகையில் ஏரியை சுற்றி 500 மரங்கள் கொண்ட அடர்வனம் அமைக்கும் நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் சுபத்ரா ராஜ்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் த.எத்திராஜ், டி.கே.பூவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாகை அறக்கட்டளை தலைவர் சி.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் 500 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் ஒன்றிய தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் வாழ்த்தி பேசினார். இதில் ஒன்றிய ஆணையர் சீ.காந்திமதிநாதன், குமார், ஊராட்சி துணைத் தலைவர் எம்.சிவராமகிருஷ்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்….

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்