மயிலேரிபாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்

 

மதுக்கரை ஜூலை 20: மயிலேரிபாளையம் ஊராட்சியில் நடை பெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் 421 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு மனு அளித்தனர். கோவை மாவட்டம், மதுக்கரை தாலுக்கா மயிலேரிபாளையம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, ஊராட்சி மன்ற தலைவர் கோமதி திருமூர்த்தி தலைமையில், ஒன்றியக்குழு துணை தலைவர் பிரகாஷ் முன்னிலையில், கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மதுக்கரை தாசில்தார் சத்தியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தனலட்சுமி, சரவணன், மாவட்ட கவுன்சிலர் ராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள், ராமலிங்கம், மாசிலாமணி, மயிலேரிபாளையம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சுப்பிரமணியம், அரிசிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், துணைத்தலைவர் ராஜேஸ்வரி தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு முகாமில் மயிலேரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏலூர், மாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு