மயிலாடும்பாறை அருகே புதிய தார்ச்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை

 

வருசநாடு, ஜூலை 8:மயிலாடும்பாறை அருகே நரியூத்து ஊராட்சிக்குட்பட்ட நரியூத்து கிராமத்திலிருந்து கோவில்பாறை கிராமம் வரை உள்ள இணைப்புச் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் இந்த சாலையில் சாக்கடை, குப்பை கழிவுகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. விவசாய நிலங்களுக்கு செல்வோர் இந்த சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போதுள்ள சாலையை வாகனங்கள் சென்று வரும் வகையில் சீரமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “

ஏற்கனவே இந்த சாலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மெட்டல் சாலை பணிகள் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்யும்போது சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் அரிப்பு ஏற்பட்டு சாலை மேலும் குண்டும், குழியுமாக மாறிவருகிறது. விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல இந்தச் சாலை லாயக்கற்ற வகையில் உள்ளதால் விவசாயிகள் சிரமமடைகின்றனர். இந்த சாலை சம்பந்தமாக கிராமசபை மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக பணிகள் தொடரப்படாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தேனி மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து கவனம் செலுத்தி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related posts

புதுகை எஸ்பி அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி

கந்தர்வகோட்டை பகுதிகளில் தென்னங்கீற்று விற்பனை விறுவிறுப்பு

பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகம் முன் கருப்பு பேட்ஜ் அணிந்து விஏஓ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்