மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,04,405 டன் குறுவை நெல் கொள்முதல்-84,726 டன் அரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை அறுவடை துவங்கி நேற்றுமுன்தினம்வரை 1 லட்சத்து நான்காயிரத்து 405 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 84 ஆயிரத்து 726 டன் வெளி மாவட்ட அரவை மில்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டுள்ளது. நேற்று மயிலாடுதுறை குத்தாலம், மற்றும் தரங்கம்பாடி தாலுக்காக்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் சிவகங்கைக்கு அனுப்பப்பட்டது.106 லாரிகள் மூலம் நெல்கொள்முதல் நிலையங்களிலிருந்து ஏற்றி வரப்பட்ட நெல்மூடைகள் மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து 40 சரக்குப் பெட்டிகளில் ஏற்றப்பட்டு சிவங்கைக்கு அனுப்பப்பட்டது. மீதமுள்ள 19,679 டன் கையிருப்பு உள்ளது, அந்த நெல்மூடைகளும் விரையில் அரவைக்கு அனுப்பப்பட்டு விடும். நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்மூடைகள் தேங்காமலிருக்க உடனடியாக ஏற்றப்பட்டு அரவைக்கு அனுப்பும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.1.10.2020 முதல் இதுவரை சம்பா குறுவை அறுவடையில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 729 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் 30ம் தேதியுடன் கொள்முதல் நிறுத்தப்பட்டு புதிய விலை உயர்வுடன் மீண்டும் நெல்கொள்முதல் நிலையங்கள் கொள்முதலை துவங்கும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!