மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில் உளுந்து பயறு அறுவடை வயலில் ஆட்டுக்கிடை போடும் பணி தீவிரம்-ஒருநாள் பட்டியில் அடைக்க ரூ.700 கூலி

மயிலாடுதுறை : மயிலாடுதுறை குத்தாலம் தாலுகாக்களில் சம்பா மற்றும் தாளடி அறுவடை முடிந்து உளுந்து பயறும் பறிக்கப்பட்டு அடுத்த மகசூல் குறுவைக்காக வயலை தயார் செய்யும் வேலை பல இடங்களில் நடைபெற்று வருகிறது. ஒருசில இடங்களில் முன்பட்டக்குறுவை சாகுபடி பணி நடைபெற்றுள்ளது. பல இடங்களில் வரப்போகும் குறுவைப் பருவத்திற்காக வயலை சீர்திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.பொதுவாக வயல்களில் செயற்கை உரத்தையே பயன்படுத்தி வருவதால் நிலம் ஒருவித ரசாயனத்தன்மை கொண்டதாக ஆகிவிடும். அதனை சரிசெய்ய மேலும் ரசாயன உரங்களை போடுவது வாடிக்கை. ஆனால் ஒருசிலர் மட்டும் இயற்கை முறையில் நிலத்தை மேம்படுத்தி வருகின்றனர் அதற்கு ஆட்டின் சிறுநீர் பெரிதும் உதவுவதாக நம்புகின்றனர். அதனால் ஆடுகளை மந்தை மந்தையாக மேய்க்கும் நபர்களை வரவழைத்து இரவு நேரத்தில் குறிப்பிட்ட வயலில் பட்டி அமைத்து தங்கவைப்பது வழக்கம்.அவ்வாறு தங்க வைக்கும்போது ஆடுகளின் சிறுநீர் நிலத்தில் கலப்பதால் மண்ணின் தன்மை மாறுகிறது. மேலும் ஆட்டின் புழுக்கைகள் உடனடிய உரமாக மாறிவிடுகிறது.தற்பொழுது மயிலாடுதுறை திருமணஞ்சேரி, பகுதிகளில் ஆட்டுக்கிடை போடும் வேலை நடைபெற்று வருகிறது. 1500 ஆடுகள் கொண்ட மந்தையை நாள் ஒன்றுக்கு தங்கவைக்க ரூ.700 கூலியாக ஆட்டின் உரிமையாளர்கள் பெற்று கொள்கின்றனர. அதே போன்று கடந்த ஒருவாரமாக திருப்பனந்தாளிலிருந்து வந்த ஆட்டு மந்தை திருமணஞ்சேரி பகுதியில் முகாமிட்டு விவசாய வயல்களில் அடைக்கப்பட்டு வருகிறது. இன்னும் 20 நாட்களுக்கு இந்தப்பகுதியில் ஆட்டுக்கிடை போடும் பணி நடைபெறும். அதன்பிறகு வேறு எங்குதேவையோ அங்கு ஆடுகளை அழைத்து சென்று விடுவர்….

Related posts

திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் இருந்த 2 உயரழுத்த மின் கோபுரங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு; தமிழகம் முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை: பென்டிரைவ், செல்போன்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்

போலி பேராசிரியர்கள் விவகாரம்; நிரந்தர தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி