மயிலாடுதுறையில் 11,240 மனுக்கள் குவிந்தன மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்தில் ஆய்வு பொதுமக்களுக்கு சிரமமின்றி பேருந்துகளை இயக்க வேண்டும்

மயிலாடுதுறை,ஜன.10: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து பணிமனை மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவதை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் பேருந்து வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை பேருந்து பணிமனை மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் தங்கு தடையின்றி இயங்குகிறதா என்பதை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேற்று ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பேருந்துகள் சரியான நேரத்தில் இயங்குகிறதா என்பதனையும் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களுக்கு எவ்வித சிரமுமின்றி பேருந்துகளை இயக்குமாறு போக்குவரத்து கழக அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, வட்டாட்சியர் சபீதா தேவி, பேருந்து பணிமனை மேலாளர் கபிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி