மயிலாடுதுறையில் வேளாண் திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறை, செப்.7: மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசின் சர்க்கரை துறை கூடுதல் ஆணையர் அன்பழகன், மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் வேளாண் திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையர், வேளாண் திட்டப்பணிகள் குறித்தும், பயிர்காப்பீடு உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கூடுதல் ஆணையர் குறுவை பயிரின் தற்போதைய நிலைகள் மற்றும் தண்ணீர் தேவை குறித்தும், சம்பா பருவத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், சம்பா பருவத்திற்கு தயாராகும் விவசாயிகள் குறுகிய கால மற்றும் மத்திய கால ரகங்களை சாகுபடி செய்யும் விபரங்கள் குறித்து வேளாண் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வேளாண்மை ஜெயபால் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை