மன்னார்குடி அருகே மூவாநல்லூரில் மா, கொய்யா ஒட்டு செடிகள் மானிய விலையில் விற்பனை-தோட்டக்கலை அதிகாரி தகவல்

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டத்தில் மா, கொய்யா ஒட்டு செடிகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுவதாக மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் (பொ) இளவரசன் தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூவாநல்லூரில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் மா ஒட்டு மற்றும் கொய்யா பதியன்கள் உற்பத்தி செய்யப்பட்டு மானிய விலையில் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. இத னை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் (பொ) இளவரசன் துவக்கி வைத்து விவசாயிகளுக்கு வழங்கினார்.பின்னர் இந்த திட்டம் குறித்து அவர் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒருங்கிணை ந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் 2021-22 படி மா ஒட்டு 75 ஹெக்டர் மற்றும் கொய்யா பதியன் 50 ஹெக்டர் அளவிற்கு விநியோகிக்கும் விதமாக மூவாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மா ஒட்டு செடி ஒரு ஹெக்டருக்கு 100 எண்களும்,கொய்யா பதியன்கள் ஒரு ஹெக்டருக்கு 277 எண்களும் விநியோகம் செய்யப்படுகிறது.ஒரு விவசாயி 2 ஹெக்டர் வரை பயனடையலாம். இம்மானியம் பெற தேவையான ஆவண ங்கள் அசல் அடங்கல், சிட்டா, ஆதார் நகல் மற்றும் புகைப்படம். ஆகும்.தற்போது செடிகள் தயார் நிலையில் உள்ளதால் அனைத்து வட்டார விவசா யிகளும் மா ஒட்டு மற்றும் கொய்யா ஒட்டு செடிகள் மானியத்தில் தேவைப் படுவோர் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலங்கங்களை தொடர்பு கொண்டு செடிகளை மூவாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்