மன்னார்குடி அரசு பள்ளியில் மாணவியை கடித்த பாம்பு: கழிவறைக்கு சென்ற போது ஏற்பட்ட விபரீதம்..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிவறைக்கு சென்ற 11 ஆம் வகுப்பு மாணவியை விஷப்பாம்பு கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் பகுதியில் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அங்கு பள்ளியிலும் 11 ஆம் வகுப்பு மாணவி நவதர்ஷினி, கழிவறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது கழிவறை கதவை திறந்தவுடன் விஷப்பாம்பு ஒன்று அவரை தீண்டியதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த மாணவி, வலியால் அலறியுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து மாணவி நவதர்ஷினிக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாணவி சற்று கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.            …

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்