மனுதர்ம நூலை தடை கோரி மனு

வண்ணாரப்பேட்டை: மனுதர்ம நூலை தடை விதிக்க வலியுறுத்தி, பெரியார் திராவிட கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் குமரன் தலைமையில், அக்கட்சியினர் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதியிடம் நேற்று மனு அளித்தனர். பின்னர், குமரன் செய்தியாளரிடம் கூறியதாவது: மனுதர்ம நூலில் 8வது அத்தியாயம் 415வது ஸ்லோகத்தில் சூத்திரர்களை 7 வகையான வார்த்தைகளில் இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்த மனுதர்ம  நூலை 1927ம் ஆண்டு அம்பேத்கர் எரித்துள்ளார். தந்தை பெரியாரும் இந்த நூலை பலமுறை எரித்துள்ளார். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை இழிவுபடுத்தும் இந்த மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை